சென்னை,
சென்னையில் இந்தியா- ஐக்கிய அரபு அமீரகம், இந்தியா-ஆஸ்திரேலியா வர்த்தக ஒப்பந்தங்கள் பற்றிய விழிப்புணர்வு விளக்க நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன், மத்திய இணை மந்திரிகள் எல்.முருகன், அனுப்ரியா படேல் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
அப்போது பேசிய நிர்மலா சீதாராமன், ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஆஸ்திரேலியாவுடனான வர்த்தக ஒப்பந்தங்களுக்காக வர்த்தகம், தொழில்துறை அமைச்சகத்தைப் பாராட்டுகிறேன். இந்த ஒப்பந்தங்கள் குறித்து நாடு முழுவதும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது.
மத்திய அரசின் அனைத்து ஆதரவும் தொழில்துறைக்கு வழங்கப்படும், ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஆஸ்திரேலியாவுடனான இந்தியாவின் வர்த்தக ஒப்பந்தங்கள் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு வழி வகுக்கும். என்று தெரிவித்தார்.