தமிழக செய்திகள்

அய்யன்கோட்டையில் அடிப்படை வசதிகள் செய்யவில்லை என குற்றச்சாட்டு

அய்யன்கோட்டையில் அடிப்படை வசதிகள் செய்யவில்லை என்று குற்றம்சாட்டி கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் புகார் மனு கொடுத்தனர்.

ஆத்தூர் தாலுகா அய்யன்கோட்டை ஊராட்சியை சேர்ந்த பெதுமக்கள் பலர் நேற்று திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்துக்கு திரண்டு வந்தனர். பின்னர் ஊராட்சி பகுதியில் அடிப்படை வசதிகள் செய்து தரவில்லை என்று குற்றம்சாட்டி மனு கொடுத்தனர். அந்த மனுவில், அய்யன்கோட்டை ஊராட்சியில் பொதுமக்களுக்கு தேவையான சுகாதாரம், குடிநீர், பொதுக்கழிப்பறை வசதிகள் முறையாக செய்துதரவில்லை.

மேலும் 100 நாட்கள் வேலை திட்டம் அரசு உத்தரவுபடி செயல்படுத்தப்படவில்லை. மாற்றுத்திறனாளிகளுக்கும் பணி நியமனம் செய்து கொடுக்கவில்லை. மேலும் வார்டு பகுதிகளில் அடிப்படை வசதிகளை செய்து தரவில்லை. தூய்மை பணியாளர்களும் நியமனம் செய்யப்படவில்லை. இதுதொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று கூறப்பட்டுள்ளது.

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை