தமிழக செய்திகள்

"ஆண்டு தோறும் செம்மொழி தமிழ் விருது" - நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்

ஆண்டு தோறும் கருணாநிதி செம்மொழி தமிழ் விருது வழங்கப்படும் நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.

தினத்தந்தி

சென்னை,

தமிழகத்தில் திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு, இன்று சட்டப் பேரவையில் தமிழக அரசின் 2021-22 நிதியாண்டுக்கான முழுமையான திருத்திய நிதிநிலை அறிக்கை (பட்ஜெட் தாக்கல்) இன்று செய்யப்பட்டு வருகிறது. தமிழக நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பட்ஜெட்டை தாக்கல் செய்து வருகிறார்.

அதன் முக்கிய அம்சங்கள் வருமாறு:-

* அனைத்து தொழில்நுட்ப துறைகளிலும் நடைமுறைகள் கணினி மயமாக்கப்படும்.

* அனைத்து பொதுசேவை துறைகளிலும் மின்னனு அளவீட்டு முறை அறிமுகப்படுத்தப்படு.

* பொது நிலங்கள் குறித்த சிறப்பான மேலாண்மைக்கு அரசு நில மேலாண்மை அமைப்பு உருவாக்கப்படும்.

* ஒவ்வொரு ஆண்டும் கருணாநிதி பிறந்த நாளான ஜூன் 3- தேதி விருது வழங்கப்படும். ஆண்டு தோறும் கருணாநிதி செம்மொழி தமிழ் விருது வழங்கப்படும்.

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு