தமிழக செய்திகள்

துணை வேந்தர்கள் நியமனம்: தேடுதல் குழுவை வாபஸ் பெறுவதாக கவர்னர் அறிக்கை

பல்கலைக்கழக துணை வேந்தர்களை நியமிக்கும் தேடுதல் குழுவை கவர்னர் ஆர்.என்.ரவி திரும்ப பெற்றுள்ளார்.

தினத்தந்தி

சென்னை,

பல்கலைக்கழக துணை வேந்தர்களை நியமிக்கும் தேடுதல் குழுவை தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி திரும்ப பெற்றுள்ளார். இது தொடர்பாக கவர்னர் ஆர்.என்.ரவி அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.பல்லாயிரக்கணக்கான மாணவர்களின் எதிர்காலம் பாதிக்காத வகையில் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும்  கவர்னர் அறிவுறுத்தல் விடுத்துள்ளார்.

உச்ச நீதிமன்றம், உயர் நீதிமன்ற தீர்ப்புகளின் அடிப்படையில் தேடுதல் குழுவை  கவர்னர்  திரும்ப பெற்றதாக தெரிகிறது. தேடுதல் குழுவை நியமனம் செய்வது தொடர்பாக கவர்னர் - தமிழக அரசு இடையே மோதல் ஏற்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்