தமிழக செய்திகள்

வெம்பக்கோட்டை அணையில் ஷட்டர்கள் முறையாக இயங்குகிறதா?

வெம்பக்கோட்டை அணையில் ஷட்டர்கள் முறையாக இயங்குகிறதா? என உதவி பொறியாளர் சுரேந்திரநாத் ஆய்வு செய்தார்.

தினத்தந்தி

தாயில்பட்டி, 

வெம்பக்கோட்டை அணையில் ஷட்டர்கள் முறையாக இயங்குகிறதா? என உதவி பொறியாளர் சுரேந்திரநாத் ஆய்வு செய்தார்.

வம்பக்காட்டை அணை

சிவகாசி மாநகராட்சிக்கு குடிநீர் ஆதாரமாக விளங்கும் வெம்பக்கோட்டை அணையில் தற்போது 16.5 அடி உயரம் நீர் உள்ளது.

கேரளா மாநிலத்தில் மழைக்காலம் தொடங்கும் அறிகுறி இருந்து வருகிறது. வருகிற ஆகஸ்டு மாதம் மழைக்காலம் முழுமையாக இருக்கும் என்பதால் வெம்பக்கோட்டை அணையில் உள்ள ஷட்டர்கள் முறையாக இயங்குகிறதா, சேதமடைந்துள்ளதா என்பதை உதவி பொறியாளர் சுரேந்திரநாத் திடீரென பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் வெம்பக்கோட்டை அணையில் உள்ள 5 ஷர்ட்டர்களையும் திறந்து விட்டார்.

அணையிலிருந்து தண்ணீர் வைப்பாற்றில் சென்றதால் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் வெம்பக்கோட்டை சுற்றுவட்டார பகுதியில் உள்ள மக்கள் அணை நிரம்பி விட்டது ஆதலால் தான் தண்ணீர் திறந்து விட்டு இருக்கிறார்கள் என ஆர்வமாக ஆற்றில் தண்ணீர் செல்வதை பொதுமக்கள் வேடிக்கை பார்த்தனர்.

வெள்ளப்பருக்கு

கோட்டைப்பட்டி அருகே வைப்பாற்றில் வெள்ளப்பெருக்கு காரணமாக இப்பகுதியை கடந்து செல்பவர்கள் செல்ல முடியாமல் மாற்றுப்பாதையில் சென்றனர்.

இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது:-

அணையில் உள்ள 5 ஷட்டர்களையும் திறந்து, மூடுவதில், எந்த பிரச்சினையும் இல்லை. அணையில் இருந்து 2 நாட்கள் வைப்பாற்றில் தண்ணீர் வெளியேற்றப்படும். பின்னர் ஷட்டர்கள் அடைக்கப்படும். இது வழக்கமான சோதனை தான்.

இ்வ்வாறு அவர்கள் கூறினர்.

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு