தமிழக செய்திகள்

பாப்பிரெட்டிப்பட்டி அருகேகோவிலில் ஒலிபெருக்கி உபகரணம் திருடிய வாலிபர் கைது

தினத்தந்தி

தர்மபுரி மாவட்டம் வெங்கடசமுத்திரம் காட்டுக்கொட்டாய் பகுதியை சேர்ந்தவர் ராஜாஜி. விவசாயி. இவர் வீட்டின் அருகே விநாயகர் கோவிலை கட்டி அதில் வழிபாடு நடத்தி வருகிறார். அந்த கோவிலில் பக்தி பாடல்களை ஒலிபரப்ப ஆம்ப்ளிபயர் வாங்கி வைத்திருந்தார். கோவிலுக்குள் வைக்கப்பட்டிருந்த அந்த உபகரணத்தை ஒரு வாலிபர் திருடி சென்றார்.

இதுகுறித்து ராஜாஜி விசாரித்தபோது அந்த வாலிபர் மோளையானூரை சேர்ந்த ஜெகன் (வயது 20) என்பது தெரியவந்தது. அவரை தேடிய போது கண்டுபிடிக்க முடியவில்லை.

இந்த நிலையில் ராஜாஜி வெங்கடசமுத்திரம் பகுதியில் அவர் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த பகுதியில் உள்ள ஒரு எலக்ட்ரிக்கல் கடை முன்பு ஜெகன் நின்று கொண்டிருந்தார். இதை பார்த்த ராஜாஜி உடனடியாக அங்கு சென்று ஜெகனை பிடித்து பாப்பிரெட்டிப்பட்டி போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தார். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் ஜெகனை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?