தமிழக செய்திகள்

தொழிலாளிக்கு அரிவாள் வெட்டுமனைவி, மாமனார் உள்பட 4 பேர் கைது

தினத்தந்தி

பாப்பாரப்பட்டி:

பாப்பாரப்பட்டி அருகே உள்ள கவுரிசெட்டிபட்டியை சேர்ந்தவர் செல்வம் (வயது 45). தொழிலாளி. இவருடைய மனைவி சித்ரா (37). இவர்களுக்கு ஒரு மகன், மகள் உள்ளனர். இந்த நிலையில் செல்வம் தனது மனைவி சித்ராவை விவாகரத்து செய்யக்கோரி கடந்த ஓராண்டுக்கு முன்பு கோர்ட்டில் மனு செய்தார்.

இதற்கிடையே செல்வம் தனது மனைவியின் சொந்த ஊரான பிக்கம்பட்டி பஸ் நிறுத்தத்தில் நின்றார். அப்போது அங்கு வந்த அவருடைய மனைவி சித்ரா, மாமனார் பழனி (59), மாமியார் சின்ன பொண்ணு, மனைவியின் அக்காள் ராஜேஸ்வரி ஆகியோர் அவரிடம் தகராறு செய்தனர். இதில் ஆத்திரம் அடைந்த பழனி மருமகன் செல்வத்தை அரிவாளால் வெட்டினார். இதில் காயமடைந்த செல்வம் தர்மபுரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். இதுகுறித்த புகாரின்பேரில் பாப்பாரப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து பழனி, சித்ரா, சின்ன பொண்ணு, ராஜேஸ்வரி ஆகியோரை கைது செய்தனர். மேலும் இந்த தகராறில் ராஜேஸ்வரியின் மகள் அகிலாவை தாக்கியதாக செல்வத்தின் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு