தமிழக செய்திகள்

சென்னிமலை முருகன் கோவிலில் பக்தர்கள் ரூ.39 லட்சம் உண்டியல் காணிக்கை

சென்னிமலை முருகன் கோவிலில் பக்தர்கள் ரூ.39 லட்சம் உண்டியல் காணிக்கையாக செலுத்தியிருந்தனா.

சென்னிமலை

சென்னிமலை முருகன் கோவிலில் நேற்று உண்டியல்கள் திறந்து காணிக்கை எண்ணும் பணி நடைபெற்றது. திருச்செங்கோடு அர்த்தனாரீஸ்வரர் கோவில் உதவி ஆணையரும், செயல் அலுவலருமான மு.ரமணிகாந்தன், சென்னிமலை கோவில் செயல் அலுவலர் ஏ.கே.சரவணன், பெருந்துறை சரக ஆய்வாளர் ஆர்.ரவிக்குமார், அயல்பணி ஆய்வர் கோ.லதா ஆகியோர் முன்னிலையில் உண்டியல்கள் திறந்து எண்ணப்பட்டது.

இதில் பக்தர்களின் காணிக்கையாக ரூ.38 லட்சத்து 99 ஆயிரத்து 591-ம், தங்கம் 123 கிராம் மற்றும் வெள்ளி 1,929 கிராமும் இருந்தது. காணிக்கை எண்ணும் பணியில் ஈரோடு மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி பணியாளர்கள், கூட்டுறவு சங்க பணியாளர்கள், அறச்சலூர் நவரசம் கல்லூரி மாணவிகள், தன்னார்வலர்கள் கோவில் பணியாளர்கள் மற்றும் அர்ச்சகர்கள் ஈடுபட்டனர்.

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை