சென்னை,
தமிழகத்தில் தற்போதைய ஆட்சி மே மாத இறுதியுடன் முடிவடைய உள்ளதால், ஏப்ரல் மாத இறுதியில் சட்டப் பேரவைத் தேர்தல் நடத்தப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பேரவைத் தேர்தலையொட்டி தலைமைத் தேர்தல் அதிகாரிகள் தமிழகத்திற்கு வருகைப்புரிந்து முக்கிய கட்சிகளுடனும் ஆலோசனை மேற்கொண்டனர். இதனைத்தொடந்து தமிழக தேர்தல் அதிகாரியும் மாவட்ட தேர்தல் அதிகாரிகளுடன் தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து அவ்வபோது ஆலோசனை மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில், தேர்தல் பாதுகாப்புப் பணிகளுக்காக மத்திய பாதுகாப்பு படையினர் இன்று தமிழகத்திற்கு வருகைப் புரிந்தனர். முதல்கட்டமாக முதற்கட்டமாக 4,500 மத்திய தொழிலக பாதுகாப்புப்படையினர் சென்னை வந்துள்ளனர். அவர்கள் பேருந்து மூலம் கிருஷ்ணகிரிக்கு செல்ல உள்ளனர்.