தமிழக செய்திகள்

கர்ப்பிணிகளுக்கு வளைகாப்பு விழா

இளையான்குடியில் கர்ப்பிணிகளுக்கு வளைகாப்பு விழாவை தமிழரசி எம்.எல்.ஏ. நடத்தி வைத்தார்

இளையான்குடி

இளையான்குடியில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி பணிகள் திட்டம் சார்பாக 120 கர்ப்பிணிகளுக்கு வளைகாப்பு விழா தனியார் மகாலில் நடைபெற்றது. விழாவில் மானாமதுரை எம்.எல்.ஏ. தமிழரசி கலந்துகொண்டு, கர்ப்பிணிகளுக்கு வளைகாப்பு நடத்தி வைத்தார். மேலும் சீர்வரிசை பொருட்கள் வழங்கப்பட்டன. பின்னர் 5 வகையான சாதங்களை பரிமாறி வாழ்த்தினார். முன்னதாக வட்டார குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் ஜூலி பெனிதா அனைவரையும் வரவேற்று பேசினார்.

சிறப்பாக பணியாற்றிய அங்கன்வாடி பணியாளர்களுக்கு கேடயம் மற்றும் பரிசுகள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சுப.மதியரசன், இளையான்குடி தாசில்தார் கோபிநாத், செயல் அலுவலர் கோபிநாத், பேரூராட்சி துணைத்தலைவர் இப்ராஹிம், மாவட்ட மகளிர் அணி துணை அமைப்பாளர் இஸ்ரின் பேகம், மாவட்ட பிரதிநிதிகள் கருணாகரன், ராஜபாண்டி, சாரதி, காளிமுத்து, ஒன்றிய துணைச்செயலாளர்கள் ராஜேந்திரன், சிவனேசன், இளைஞர் அணி பைரோஸ்கான், இப்ராம்ஷா, தமீம்அன்சாரி, முகம்மது பாட்ஷா, நவாஸ்கான், செய்யதுல்லா, சபரிக் முகம்மது, மற்றும் ஒன்றிய நகர நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை