தமிழக செய்திகள்

குடியிருப்புக்குள் புகுந்த காட்டெருமைகள்

குன்னூர் அருகே குடியிருப்புக்குள் புகுந்த காட்டெருமைகளால் பரபரப்பு ஏற்பட்டது.

தினத்தந்தி

குன்னூர் சுற்றுவட்டார பகுதிகளில் சமீப காலமாக காட்டெருமைகள் நடமாட்டம் அதிகரித்து உள்ளது. உணவு மற்றும் தண்ணீர் தேடி குடியிருப்பு பகுதிகளில் உலா வருவதால், பொதுமக்கள் அச்சம் அடைந்து உள்ளனர். இந்தநிலையில் நேற்று காலை குன்னூர் அருகே அருவங்காடு கலைமகள் பிரிவில் உள்ள குடியிருப்பு பகுதியில் காட்டெருமைகள் முகாமிட்டன. இதனால் அப்பகுதி மக்கள் அச்சம் அடைந்தனர். மேலும் பள்ளி, கல்லூரிகளுக்கு மாணவ-மாணவிகள் செல்லும் வழியில் காட்டெருமைகள் நின்றதால், அவர்கள் சிரமம் அடைந்தனர். மணி நேரம் உலா வந்த காட்டெருமைகள் பின்னர் வனப்பகுதிக்குள் சென்றன. எனவே, வனத்துறையினர் கண்காணித்து காட்டெருமைகள் குடியிருப்புக்குள் வராமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்