தமிழக செய்திகள்

புஞ்சைபுளியம்பட்டி நகராட்சி அலுவலகம் முன்பு பா.ஜ.க.வினர் தர்ணா; மாட்டு இறைச்சி கடையை அகற்ற கோரிக்கை

புஞ்சைபுளியம்பட்டி நகராட்சி அலுவலகம் முன்பு பா.ஜ.க.வினர் தர்ணா; மாட்டு இறைச்சி கடையை அகற்ற கோரிக்கை

தினத்தந்தி

புஞ்சைபுளியம்பட்டி

புஞ்சைபுளியம்பட்டி வாரச்சந்தையையொட்டி தனியாருக்கு சொந்தமான இடத்தில் அனுமதியின்றி நேற்று மாட்டு இறைச்சி கடை தொடங்கப்பட்டது. இதனை கண்டித்து பாரதீய ஜனதா கட்சி சார்பில் நகர தலைவர் தங்கமணி தலைமையில் நகராட்சி அலுவலகத்தில் கட்சியினர் ஒன்று திரண்டனர். பின்னர் நகராட்சி அலுவலகம் முன்பு உட்கார்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்கள்.

இதைத்தொடர்ந்து நகராட்சி மேலாளர் செந்தில்வேல் அங்கு சென்று முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்பாது போராட்டக்காரர்கள் கூறும்போது, 'பொதுமக்கள் வசிக்கும் பகுதியில் தனியாருக்கு சொந்தமான இடத்தில் அனுமதியின்றி தொடங்கப்பட்ட மாட்டு இறைச்சி கடையை அகற்ற வேண்டும். வாரச்சந்தை பகுதியிலேயே மாட்டு இறைச்சி கடை செயல்பட வேண்டும்' என்றனர்.

அதற்கு நகராட்சி மேலாளர் செந்தில்வேல் கூறும்போது, 'உங்களுடைய கோரிக்கையை மனுவாக கொடுங்கள். உரிய நடவடிக்கை எடுக்கப்படும்' என்றனர். இதனை ஏற்றுக்கொண்டு பா.ஜ.க.வினர் போராட்டத்தை கைவிட்டனர். பின்னர் கோரிக்கையை மனுவாக எழுதி நகராட்சி மேலாளரிடம் கொடுத்துவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு