தமிழக செய்திகள்

பெண் போலீசை தாக்கியதாக புகார்: பாஜக நிர்வாகி சசிகலா புஷ்பாவின் மகன் கைது

பணியில் இருந்த பெண் போலிசை தாக்கியதாக புகாரளித்த நிலையில் கைது

தினத்தந்தி

விருகம்பாக்கம் ,சென்னை

முன்னாள் எம்பியும் பாஜக மாநில துணை தலைவருமான சசிகலா புஷ்பாவின் மகன் பிரதிப்ராஜ்.இவர் சென்னை விருகம்பாக்கம் சாலையில் சென்று கொண்டிருந்தர் .அப்போது வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்த பெண் காவலர் அவரை சோதனையிட முயன்றார்.அப்போது பிரதிப் ராஜ் , அந்த  பெண் காவலரை தாக்கியதாக சொல்லப்படுகிறது.இதனை தொடர்ந்து அவர் மது போதையில் இருந்ததாக விசாரணையில் தெரியவந்தது.

எனவே போலிசார் வழக்கு பதிவு செய்து பிரதிப் ராஜை கைது செய்தனர்.ஆனால் அவர் அளவுக்கு அதிகமாக மது அருந்தியிருந்தது தெரியவந்ததால்  அவரை வீட்டிற்கு அனுப்பிய போலிசார் ,மீண்டும் இன்று காலை விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் ஆஜராக வேண்டும் என போலிசார் தெரிவித்துள்ளனர்.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்