தமிழக செய்திகள்

பெரியகல்லப்பாடி-புதூர் சாலையோரம் குடிநீர் குழாயில் உடைப்பு

பெரியகல்லப்பாடி-புதூர் சாலையோரம் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டது.

தினத்தந்தி

வாணாபுரம்

பெரியகல்லப்பாடி-புதூர் சாலையோரம் குடிநீர் குழாயில் உடைப்பு 

திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்டது பெரியகல்லப்பாடி. இப்பகுதியில் இருந்து புதூர் செல்லும் சாலை உள்ளது. இந்த சாலையோரம் குடிநீர் குழாய் செல்கிறது. இந்தக் குழாய் சேதம் ஏற்பட்டு தண்ணீர் வீணாக வெளியறுகிறது. மேலும் குடிநீர் குழாயில் குறைந்த அளவே தண்ணீர் செல்வதால் பொதுமக்களுக்கு சரிவர குடிநீர் கிடைக்கவில்லை. சேதமான குழாயை சீரமைப்பது மட்டுமல்லாமல் சீரான குடிநீர் வினியோகிக்க வேண்டும் என்று அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் சம்பந்தப்பட்ட ஊராட்சி நிர்வாகத்திற்கு பலமுறை புகார் தெரிவித்தும் எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.

தற்போது கோடைகாலமாக இருப்பதால் தண்ணீரின் தேவை அதிகமாக உள்ளது. ஆகையால் குழாயை சீரமைத்து தண்ணீர் வீணாவதை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதியச் சேர்ந்த பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்