தமிழக செய்திகள்

கோவில்களின் பூட்டை உடைத்து உண்டியல் பணம் திருட்டு

கோவில்களின் பூட்டை உடைத்து உண்டியல் பணம் திருட்டுபோனது.

தினத்தந்தி

வையம்பட்டி:

திருச்சி மாவட்டம், வையம்பட்டியை அடுத்த நடுப்பட்டியில் காளியம்மன், மாரியம்மன் மற்றும் முருகன் கோவில் உள்ளது. நேற்று இந்த கோவில்களின் பூட்டு உடைக்கப்பட்டிருந்ததுடன், அங்கிருந்த உண்டியல்களும் உடைக்கப்பட்டு பணம் திருட்டு போயிருந்தது. இதைக்கண்டு ஊர் முக்கியஸ்தர்கள் மற்றும் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். மேலும் இது குறித்து வையம்பட்டி போலீசில் புகார் அளித்தனர். அதன்பேரில் வையம்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். உண்டியலில் சுமார் ரூ.3 ஆயிரம் வரை பணம் இருந்திருக்கும் என்று கூறப்படுகிறது.

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு