தமிழக செய்திகள்

காவிரி கூட்டு குடிநீர் குழாயில் உடைப்பு

தரகம்பட்டி அருகே காவிரி கூட்டு குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டது.

தினத்தந்தி

தரகம்பட்டி அருகே ரெட்டியபட்டி-குஜிலியம்பாறை சாலையில் மாயனூர் காவிரி ஆற்றில் இருந்து திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் செல்லும் காவிரி கூட்டு குடிநீர் குழாயில் நாச்சிபட்டி பிரிவு ரோட்டுக்கும், காந்திநகர் பஸ் நிறுத்தத்திற்கும் இடையே கடந்த 2 நாட்களுக்கு முன்பு உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாக சாலையில் சென்று வருகிறது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு பலமுறை புகார் தெரிவித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் குடிநீர் குழாயை சீரமைக்க வேண்டும் என பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்