தமிழக செய்திகள்

பாசிகுளத்தை ஆக்கிரமித்துள்ள ஆகாய தாமரை செடிகள் அகற்றப்படுமா?

பாசிகுளத்தை ஆக்கிரமித்துள்ள ஆகாய தாமரை செடிகள் அகற்றப்படுமா?

தினத்தந்தி

ஆய்குடி ஊராட்சியில் உள்ள பாசிகுளத்தை ஆக்கிரமித்துள்ள ஆகாய தாமரை செடிகளை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பாசிகுளம்

கொரடாச்சேரி ஒன்றியம் ஆய்குடி ஊராட்சி கொல்லாக்கண்டம் கிராமத்தில் பாசிகுளம் உள்ளது. இந்த குளம் 15 ஆண்டுகளுக்கு மேலாக தூர்வாராமல் உள்ளது. தற்போது குளத்தை ஆகாய தாமரை செடிகள் ஆக்கிரமித்துள்ளன. மேலும் குளத்தை சுற்றி செடி, கொடிகள் வளர்ந்து புதர் மண்டி கிடக்கிறது. இந்த குளம் சுத்தமானதாகவும், சுகாதாரமானதாகவும் இல்லாததால் துர்நாற்றம் வீசுகிறது.

இந்த குளத்தை சுற்றி கீழ முகந்தனூர், மேல முகந்தனூர், கொல்லாக்கண்டம், பட்டுடையான், இருப்பு, சமத்துவபுரம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களை சேர்ந்த 300-க்கும் மேற்பட்டவர்கள் வசித்து வருகின்றனர். இந்த குளத்திற்கு வரும் பாசன வாய்க்கால்- வடிகால் தூர்ந்துள்ளது.

தூர்வார வேண்டும்

இதனால் அந்த குளத்தை பயன்படுத்த முடியாமல் அப்பகுதி பொதுமக்கள் சிரமப்படுகின்றனர். இந்த ஆகாய தாமரை செடிகள் பாசனத்திற்கு தண்ணீர் செல்ல முடியாத அளவுக்கு இடையூறாக உள்ளது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பலமுறை மனு அளித்தும் இதுவரை குளம் தூர்வாரப்படவில்லை. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நேரில் வந்து குளத்தை பார்வையிட்டு குளத்தை ஆக்கிரமித்துள்ள ஆகாய தாமரை செடிகளை அகற்றி தூர்வாரி பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்