தமிழக செய்திகள்

ஸ்ரீபெரும்புதூர் அருகே கால்வாய்க்குள் பாய்ந்த கார் - 3 பேர் உயிர் தப்பினர்

ஸ்ரீபெரும்புதூர் அருகே காய்வாய்க்குள் கார் பாய்ந்தது. இதில் காரில் இருந்த 3 பேர் உயிர் தப்பினர்.

தினத்தந்தி

ஆவடியை சேர்ந்தவர் அர்ஜுன் (வயது 24). இவர், நேற்று முன்தினம் இரவு தனது நண்பர்களுடன் காஞ்சீபுரத்தில் இருந்து காரில் சென்னை நோக்கி சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தார்.

ஸ்ரீபெரும்புதூர் அருகே சாலை விரிவாக்க பணி நடைபெற்று வருவதால் அர்ஜுன் வந்த கார் கட்டுப்பாட்டை இழந்து பாலத்தின் அடியில் இருந்த கால்வாய்க்குள் பாய்ந்தது. கால்வாயில் இருந்த தண்ணீரில் கார் மூழ்க தொடங்கியது. சுதாரித்து கொண்ட 3 பேரும் காரில் இருந்து தப்பி மேலே வந்தனர்.

இது குறித்து தகவல் அறிந்துவந்த ஸ்ரீபெரும்புதூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பரந்தாமன் மற்றும் போலீசார் பொக்லைன் எந்திரம் உதவியுடன் நீரில் மூழ்கிய காரை மீட்டனர்.

இந்த விபத்து குறித்து ஸ்ரீபெரும்புதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இந்த விபத்தில் காரில் வந்த 3 பேரும் எந்த காயமும் இன்றி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்