தமிழக செய்திகள்

தமிழகத்தில் 18 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் 18 மாவட்டங்களில் அடுத்த 3 மணிநேரத்தில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளது.

தினத்தந்தி

சென்னை,

தென்கிழக்கு வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் கடந்த 8ந்தேதி புயலாக உருவெடுத்தது. அதற்கு அசானி என்று பெயரிடப்பட்டுள்ளது. அசானி புயல் ஆந்திரா-ஒடிசா மாநிலங்களை மிரட்டி கொண்டிருக்கிறது.

அசானி புயல் சின்னம் காரணமாக சென்னை விமான நிலையத்தில் 17 உள்நாட்டு விமான சேவை ரத்து செய்யப்பட்டன. மேலும் சென்னையில் இருந்து அந்தமானுக்கு விமானங்கள் காலதாமதமாக புறப்பட்டு சென்றன.

இந்நிலையில், அசானி புயலால் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதியால் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழை பெய்ய கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

இதன்படி, அடுத்த 3 மணிநேரத்தில் சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளது. விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூரிலும் லேசானது முதல் மித அளவிலான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

இதேபோன்று தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம், திருப்பூர் மாவட்டங்களிலும் அடுத்த 3 மணிநேரத்தில் மித அளவிலான மழைக்கு வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்