தமிழக செய்திகள்

திருப்பதி விஐபி தரிசனத்தில் மாற்றம்: சாமானிய பக்தர்களுக்கு முன்னுரிமை

திருப்பதி விஐபி தரிசனத்தில் சோதனை அடிப்படையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

தினத்தந்தி

திருமலை,

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தினமும் காலை 5 மணி முதல் 8 மணி வரை விஐபி பிரேக் தரிசனம் நடைமுறையில் இருந்தது. இதனால் முந்தைய நாள் இரவு ஏகாந்த சேவைக்கு பின் தரிசனத்திற்கு வரும் சாமானிய பக்தர்கள் மறுநாள் காலை 5 - 8 மணி வரை சுவாமியை தரிசிக்க இயலாமல் இருந்தது.

இந்நிலையில், விஐபி பிரேக் தரிசனம் நேற்று முதல் சோதனை அடிப்படையில் காலை 8 மணிக்கு தொடங்கும் வகையில் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. இதனால் நேற்று காலை 5 - 8 மணி வரை 15 ஆயிரம் சாமானிய பக்தர்கள் சர்வ தரிசனம் மூலம் சுவாமியை தரிசித்துள்ளனர். விடிந்ததும் சுவாமியை தரிசனம் செய்து விட்டு ஊர் திரும்ப புதிய நடைமுறை வசதியாக உள்ளது என பக்தர்கள் தெரிவித்தனர்

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு