சென்னை,
பாரத் பெட்ரோலிய நிறுவனத்தை தனியாருக்கு விற்கும் மத்திய அரசின் முடிவை கண்டித்து வரும் 28, 29-ம் தேதிகளில் வேலைநிறுத்த போராட்டம் நடத்தப்போவதாக தொழிற்சங்கங்கள் அறிவித்தன.
தொழிற்சங்கங்களின் முடிவுக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில், பாரத் பெட்ரோலிய நிறுவனம் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், பாரத் பெட்ரோலியம் தொழிற்சங்கங்கள் அறிவித்திருந்த போராட்டத்திற்கு தடை விதித்துள்ளது.
மேலும், பாரத் பெட்ரோலிய நிறுவன அலுவலகத்திற்கு 28, 29 ஆகிய நாட்களில் போலீஸ் பாதுகாப்பு வழங்க டிஜிபிக்கு உத்தரவிட்டுள்ளது.