தமிழக செய்திகள்

செஸ் ஒலிம்பியாட்: அணிகள் பதிவு செய்ய அவகாசம் நீட்டிப்பு

சென்னை மாமல்லபுரத்தில் நடைபெறும் செஸ் ஒலிம்பியாட் போட்டியில் பதிவு செய்வதற்கான கால அவகாசம் ஜூன் 27 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

தினத்தந்தி

சென்னை,

44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் ஜூலை 28-ந் தேதி முதல் ஆகஸ்டு 10-ந் தேதி வரை நடக்கிறது. இந்த போட்டியில் 150-க்கும் மேற்பட்ட நாடுகளை சேர்ந்த அணிகள் கலந்து கொள்கின்றன.

இந்தநிலையில், சென்னை மாமல்லபுரத்தில் நடைபெறும் செஸ் ஒலிம்பியாட் தொடரில் பங்கேற்கும் அணிகள் பதிவு செய்வதற்கான கால அவகாசம் ஜூன் 27 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. செஸ் ஒலிம்பியாட் தொடரில் பங்கேற்கும் அணிகள் ஜூன் 27 வரை அபராதமின்றி பதிவு செய்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

செஸ் ஒலிம்பியாட் தொடரில் பங்கேற்க நாளையுடன் முன்பதிவு முடிவடையும் நிலையில் செஸ் ஒலிம்பியாட்டில் பங்கேற்க இதுவரை 174 நாடுகள் முன்பதிவு செய்துள்ளன. ஒலிம்பியாட்டில் பங்கேற்க இதுவரை 174 ஆண்கள் அணியும், 145 பெண்கள் அணியும் பதிவு செய்துள்ளன.

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்