தமிழக செய்திகள்

முதல்-அமைச்சரின் காலை உணவு திட்டம்

முதல்-அமைச்சரின் காலை உணவு திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது.

தினத்தந்தி

காலை உணவு திட்டம்

இந்தியாவிலேயே முதல் முறையாக தமிழகத்தில் தான் அரசு பள்ளிகளில் 1 முதல் 5-ம் வகுப்பு பயிலும் மாணவ-மாணவிகளுக்கு முதல்-அமைச்சரின் காலை உணவு வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது. தமிழக முதல்-அமைச்சரின் காலை உணவு திட்டம் ஏற்கனவே அரியலூர் மாவட்டத்தில் 10 அரசு பள்ளிகளில் 1 முதல் 5-ம் வகுப்பு வரை பயிலும் மொத்தம் 540 மாணவ-மாணவிகளுக்கு செயல்படுத்தப்பட்டு வருகிறது. தற்போது தமிழக முதல்-அமைச்சரின் காலை உணவு திட்டம் மாநிலம் முழுவதும் விரிவுப்படுத்தப்பட்டது.

அதன்படி அரியலூர் மாவட்டத்தில் மீதமுள்ள 479 அரசு பள்ளிகளிலும் 1 முதல் 5-ம் வகுப்பு வரை பயிலும் மொத்தம் 26 ஆயிரத்து 457 மாணவ-மாணவிகளுக்கும் முதல்-அமைச்சரின் காலை உணவு திட்டம் நேற்று முதல் தொடங்கப்பட்டது. மாவட்டத்தில் செந்துறை ஒன்றியத்துக்கு உட்பட்ட குழுமூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் பயிலும் மாணவ-மாணவிகளுக்கு அமைச்சர் சிவசங்கர் முதல்-அமைச்சரின் காலை உணவு திட்டத்தை தொடங்கி வைத்து, அவர்களுக்கு உணவுகளை பரிமாறினார்.

எம்.எல்.ஏ.க்கள்

அப்போது மாவட்ட கலெக்டர் ஆனி மேரி ஸ்வர்ணா மற்றும் சம்பந்தப்பட்ட அலுவலர்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் உடனிருந்தனர். இதேபோல் முதல்-அமைச்சரின் காலை உணவு திட்டத்தை அரியலூர் எம்.எல்.ஏ. சின்னப்பா பொய்யாதநல்லூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியிலும், ஜெயங்கொண்டம் எம்.எல்.ஏ. க.சொ.க.கண்ணன் துளாரங்குறிச்சி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியிலும் தொடங்கி வைத்தனர்.

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்