தமிழக செய்திகள்

திருவள்ளூர் மாவட்டத்தில் ஐகோர்ட்டு சிறப்பு அனுமதியுடன் சேவல் சண்டை

ஐகோர்ட்டு சிறப்பு அனுமதியுடன் சேவல் சண்டையில் 500-க்கும் மேற்பட்ட சேவல்கள் ஆக்ரோஷமாக மோதியது.

தமிழகத்தில் வீர விளையாட்டாக சிறப்பு பெற்ற சேவல் சண்டையில் சூதாட்டம் புகார்களால் இந்த போட்டிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் திருவள்ளூர் மாவட்டம் திருவாலங்காடு ஒன்றியம் களாம்பாக்கம் கிராமத்தில் சேவல் சண்டை போட்டிக்கு சிறப்பு அனுமதி வழங்க வேண்டும் என்று போட்டி ஏற்பாட்டாளர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தை நாடி அனுமதிப்பெற்றனர்.

இதனை தொடர்ந்து களாம்பக்கம் கிராமத்தில் நேற்று சேவல் சண்டை போட்டிகள் தொடங்கியது. இந்த போட்டிகளில் பங்கேற்க தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களிலிருந்தும், ஆந்திரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களிலிருந்து சேவல் வளர்ப்போர் களாம்பாக்கம் சேவல் போட்டி நடைபெறும் களத்தில் குவிந்தனர். போட்டியில் 500-கும் மேற்ப்பட்ட சேவல்கள் ஆக்ரோஷமாக மோதிக்கொண்டது. இன்றும் போட்டி நடைபெற உள்ளது. போட்டியில் வெற்றி பெறும் சேவல்களின் உரிமையாளர்களுக்கு இறுதியில் பரிசு வழங்கப்படும். பாதுகாப்பு பணியில் திருவாலங்காடு போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை