கோப்புப்படம் 
தமிழக செய்திகள்

கொரோனா தடுப்பூசி குறித்து கருத்து: முன்ஜாமீன் கோரும் நடிகர் மன்சூர் அலிகான்

கொரோனா தடுப்பூசி குறித்து கருத்து தெரிவித்த நடிகர் மன்சூர் அலிகான் முன்ஜாமீன்கோரி நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

தினத்தந்தி

சென்னை,

தமிழகம் முழுவதும் கொரோனா பரவலை தடுக்க 45 வயதிற்கு அதிகமானோருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இதனிடையே சமீபத்தில் நடிகர் விவேக் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய மன்சூர் அலிகான் கொரோனா தடுப்பூசி குறித்தும் சில கருத்துகளை தெரிவித்தார். அவரின் கருத்துகள் சர்ச்சையை ஏற்படுத்தியநிலையில் சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் அளித்த புகாரின் பேரில் மன்சூர் அலிகான் மீது வடபழனி போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

இந்நிலையில் வழக்கில் கைது செய்வதில் இருந்து விலக்கு பெற முன்ஜாமின் கோரி மன்சூர் அலிகான் மனு தாக்கல் செய்துள்ளார். கொரோனா தடுப்பூசி பற்றி உள்நோக்கத்துடன் கருத்து கூறவில்லை என்றும், தடுப்பூசி செலுத்துவதை கட்டாயப்படுத்தக் கூடாது என்றுதான் கூறினேன் என்றும் மன்சூர் அலிகான் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு