தமிழக செய்திகள்

சமுதாய வளைகாப்பு விழா; எம்.எல்.ஏ. பங்கேற்பு

நாங்குநேரியில் சமுதாய வளைகாப்பு விழா நடைபெற்றது. ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. பங்கேற்று கர்ப்பிணிகளுக்கு சீர்வரிசை பொருட்களை வழங்கினார்.

இட்டமொழி:

நாங்குநேரி ஆர்.யு.சி. மகாலில் கர்ப்பிணி பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு விழா நடைபெற்றது. விழாவில் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி பொருளாளரும், நாங்குநேரி சட்டமன்ற உறுப்பினருமான ரூபி ஆர்.மனோகரன் தலைமை தாங்கி, 200 கர்ப்பிணி பெண்களுக்கு வளைகாப்பு நிகழ்ச்சி நடத்தி, சொந்த செலவில் சேலை உட்பட்ட சீர்வரிசை பொருட்களை வழங்கினார். மேலும் ரூபி மனோகரன் எம்.எல்.ஏ., பேசுகையில், தமிழக முதலமைச்சர் பெண்கள் முன்னேற்றத்துக்கான பல்வேறு திட்டங்களை நிறைவேற்றி வருகிறார். தற்போது பெண்கள் உரிமை தொகை திட்டத்தை நிறைவேற்றிக் கொடுத்துள்ளார் என்று கூறினார்.

விழாவில் நாங்குநேரி மேற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் ஆர்.எஸ்.சுடலைக்கண்ணு, உதவி திட்ட அலுவலர் சுமதி, மாவட்ட குழந்தை வளர்ச்சி அலுவலர் பர்வதராணி, நாங்குநேரி யூனியன் ஆணையாளர் வி.யமுனா, மாவட்ட கவுன்சிலர் கிருஷ்ணவேணி மற்றும் பஞ்சாயத்து தலைவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்