தமிழக செய்திகள்

குடமுருட்டி ஆற்றில் தடுப்பணை கட்டும் பணி

பசுபதி கோவில் ஊராட்சியில் குடமுருட்டி ஆற்றில் தடுப்பணை கட்டும் பணியை ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ. ஆய்வு செய்தார்.

தினத்தந்தி

பாபநாசம்:

பாபநாசம் வட்டம் பசுபதி கோவில் கிராமத்தில் 500 ஏக்கர் விளைநிலங்கள் உள்ளன. குடமுருட்டி ஆற்றில் தண்ணீர் இருக்கும் காலங்களிலும் கூட பசுபதி கோவில் கிராமத்தில் உள்ள விளைநிலங்களுக்கு தண்ணீர் முழுமையாக செல்ல முடியாத நிலை உள்ளது. இதற்கு தீர்வு காண குடமுருட்டி ஆற்றில் பசுபதி கோவில் தலைப்பு வாய்க்கால் அருகில் தடுப்பணை கட்ட வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்து வந்தனர். இந்த கோரிக்கையை ஏற்று மாத்தூர் அருகில் குடமுருட்டி ஆற்றில் தடுப்பணை கட்டும் பணி நடந்து வருகிறது. இந்த பணிகளை ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ. நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது நீர்வளத்துறை பொறியாளர் அன்புச் செல்வன் தடுப்பணை கட்டும் பணி குறித்து எம்.எல்.ஏ.வுக்கு விளக்கி கூறினார். இந்த ஆய்வின் போது மனிதநேய மக்கள் கட்சி துணைப் பொதுச் செயலாளர் தஞ்சை பாதுஷா, பாபநாசம் தி.மு.க. தெற்கு ஒன்றிய செயலாளர் நாசர், பாபநாசம் ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் சுமதி கண்ணதாசன், வட்டார வளர்ச்சி அலுவலர் சிவக்குமார், பசுபதிகோவில் ஊராட்சி மன்றத் தலைவர் ரேவதி நடராஜன் உள்பட பலர் உடனிருந்தனர்.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்