தமிழக செய்திகள்

ஈரோடு மாநகராட்சி சார்பில் சுதந்திர தினத்தை முன்னிட்டு தேசிய கொடி வீடு வீடாக வினியோகம்

ஈரோடு மாநகராட்சி சார்பில் சுதந்திர தினத்தை முன்னிட்டு தேசிய கொடி வீடு வீடாக வினியோகம்

தினத்தந்தி

ஈரோடு

இந்தியாவின் 75-வது சுதந்திர தின விழா நாளை மறுநாள் (திங்கட்கிழமை) கொண்டாடப்படுகிறது. சுதந்திர தினத்தை போற்றும் வகையில் வீடுகளில் இன்று (சனிக்கிழமை) முதல் நாளை மறுநாள் (திங்கட்கிழமை) வரை 3 நாட்கள் தேசிய கொடியை பறக்க விடுமாறு பிரதமர் நரேந்திரமோடி வேண்டுகோள் விடுத்துள்ளார். அதன்படி உள்ளாட்சி நிர்வாகங்கள் சார்பில் தேசிய கொடி வழங்கப்பட்டு வருகிறது. ஈரோடு மாநகராட்சி சார்பில் மாநகராட்சி பணியாளர்கள் வீடு வீடாக சென்று தேசியக்கொடியை வினியோகம் செய்தனர். மக்களும் ஆர்வத்துடன் தேசிய கொடியை பெற்றுக்கொண்டனர்.

இதுகுறித்து மாநகராட்சி நகர் நல அலுவலர் பிரகாஷ் கூறும்போது, 'ஈரோடு மாநகராட்சியில் 1 லட்சத்து 30 ஆயிரம் குடியிருப்புகள் உள்ளன. தற்போது 60 ஆயிரம் தேசிய கொடிகள் வந்துள்ளது. இவைகள் 4 மண்டலங்களுக்கும் பிரித்து கொடுக்கப்பட்டுள்ளது. மாநகராட்சி பணியாளர்கள் ஒவ்வொரு வீடாக சென்று தேசிய கொடியை வழங்கி வருகின்றனர். வீடுகளில் முன்புறம் உயரத்தில் தேசிய கொடியை பறக்க விடுமாறு மக்களிடம் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது' என்றார். இதேபோல் சுதந்திர திருநாள் அமுதா பெருவிழாவை கொண்டாடும் வகையில் ஈரோட்டில் உள்ள கடைகள், வணிக நிறுவனங்கள், மால்கள், சினிமா தியேட்டர்கள், உணவு நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள், பெட்ரோல் பங்குகள், ஆஸ்பத்திரிகள் என அனைத்து தொழில் நிறுவனங்களிலும் தேசிய கொடி ஏற்றப்பட்டு வருகிறது.

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு