தமிழக செய்திகள்

குடிசை வீட்டில் தீ விபத்து

நெமிலி அருகே குடிசை வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் பொருட்கள் எரிந்து நாசமாயின.

நெமிலியை அடுத்த பள்ளுர் கிராமத்தில் அம்பேத்கர் நகரில் வசித்துவருபவர் கலா (வயது 55). இவர் விவசாய கூலிவேலை செய்துவருகிறார். ஜாகீர் தண்டலம் கிராமத்தில் உள்ள உறவினர் வீட்டுக்கு கலா செனறார். பின்னர் திரும்பி வந்தபோது திடீரென தனது குடிசைவீடு தீப்பிடித்து எரிவதை கண்டு அதிர்ச்சியடைந்தார். உடனே அருகிலிருந்தவர்கள் அரக்கோணம் தீயணைப்பு படையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

அதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு படை வீரர்கள் நீண்ட நேரம் போராடி தீயை அணைத்தனர். இருப்பினும் வீட்டில் இருந்த பொருட்கள் அனைத்தும் தீயில் கருகி சேதமடைந்தன. இதுகுறித்து நெமிலி போலீசார் வழக்குப் பதிவுசெய்து விசாரித்து வருகின்றனர்.

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்