தமிழக செய்திகள்

மிக்ஜம் புயல்: பொதுமக்கள் தொடர்பு கொள்ள முக்கிய தொலைபேசி எண்கள் அறிவிப்பு

மிக்ஜம் புயலால் சென்னையின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கியது.

தினத்தந்தி

சென்னை,

`மிக்ஜம்' புயல் காரணமாக சென்னையில் அதி கனமழை பெய்ததால் நகரமே தண்ணீரில் தத்தளிக்கிறது. மாநகரின் பெரும்பாலான சாலைகள், சுரங்கப்பாதைகளில் மழை நீர் தேங்கியது. இதனால், பொதுமக்கள் மிகுந்த அவதிக்குள்ளாகினர். தாழ்வான பகுதிகளில் புகுந்த வெள்ளநீரை அகற்றும் பணி தற்போது நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், மிக்ஜாம் புயல் பொதுமக்கள் தொடர்பு கொள்ள முக்கிய தொலைபேசி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சியின் அவசர கட்டுப்பாட்டு அறைக்கு 1913 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம்; 9445477205 என வாட்ஸ் அப் எண் , 04425619207, 04425619206, 04425619204 என்ற எண்களை தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

உங்கள் பகுதியில் ஏற்பட்ட புயல் பாதிப்புகளை, 8939888401 என்ற வாட்ஸ்-அப் எண்ணில் அனுப்பலாம் என்று மாநகராட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு