தமிழக செய்திகள்

வருமானவரி கணக்கு தாக்கல் செய்ய செப்டம்பர் 30ந்தேதி வரை கால அவகாசம்; மத்திய நேரடி வரி வாரியம் அறிவிப்பு

வருமானவரி கணக்கு தாக்கல் செய்ய செப்டம்பர் 30ந்தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது என மத்திய நேரடி வரி வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

சென்னை,

வருமானவரி கணக்கு ஆண்டுதோறும் தாக்கல் செய்யப்படுவது வழக்கமாக இருந்து வருகிறது. அந்த வகையில் கடந்த, 2018-2019ம் நிதியாண்டுக்கான, வருமானவரி கணக்கு தாக்கல் செய்வதற்கான கால அவகாசம், கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் தொடங்கியது. அபராதம் செலுத்தி, கணக்கு தாக்கல் செய்வதற்கான அவகாசம், கடந்த மார்ச் 31ந்தேதி உடன் முடிவடைந்தது. கொரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக, இந்த காலஅவகாசம் இன்று (ஜூலை 31ந்தேதி) வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் தற்போது, கணக்கு தாக்கல் செய்ய வருகிற செப்டம்பர் மாதம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, வருமான வரித்துறை அதிகாரிகள் கூறியதாவது:-

வருமானவரித்துறையில் 2018-2019ம் நிதியாண்டுக்கான, கணக்கு தாக்கல் செய்வதற்கான காலஅவகாசம் நாளை (இன்று) உடன் நிறைவடைகிறது. கொரோனா வைரஸ் தொற்று காரணமாக, கணக்கு தாக்கல் செய்வதில் பல்வேறு தடைகள் ஏற்பட்டுள்ளன.

இதை கருத்தில் வைத்து, இந்த அவகாசம், செப்டம்பர் 30ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பாணையை, மத்திய நேரடி வரி வாரியம் வெளியிட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி