திருச்சி,
ஐக்கிய அரபு அமீரக அதிபர் ஷேக் கலிபா பின் சையத் அலி நஹியான் மறைவைத் தொடர்ந்து, இந்தியா முழுவதும் துக்கம் அனுசரிக்கும் படி இந்திய அரசு அறிவிப்பு வெளியிட்டிருந்தது.
இதுதொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகம் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு நேற்று அனுப்பிய தகவல்களின்படி, மறைந்த ஐக்கிய அரபு அமீரக அதிபர் சேக் கலீபா பின் சயத் அல் நகியானுக்கு மரியாதை செலுத்தும் வகையில், இன்று நாடு முழுவதும் ஒரு நாள் துக்கம் அனுசரிக்கப்படும் என்று தெரிவித்தது.
அதன்படி திருச்சி விமான நிலையத்தில் ஐக்கிய அரபு அமீரக அதிபர் மறைவையொட்டி தேசியக்கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்டிருந்தது.