தமிழக செய்திகள்

பாரிவேந்தர் எம்.பி. குறித்து அவதூறாக பேசியவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் போலீஸ் சூப்பிரண்டிடம் புகார் மனு

பாரிவேந்தர் எம்.பி. குறித்து அவதூறாக பேசியவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போலீஸ் சூப்பிரண்டிடம் புகார் மனு அளிக்கப்பட்டது.

தினத்தந்தி

விழுப்புரம் மாவட்ட இந்திய ஜனநாயக கட்சி நிர்வாகிகள் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதாவிடம், புகார் மனு ஒன்றை அளித்தனர். அதில், அவர்கள் கூறியிருப்பதாவது:-

யூடியூப் சேனல் ஒன்றில், பேசிய ஒருவர் எங்கள் கட்சியின் தலைவரும், எம்.பி.யுமான பாரிவேந்தர் குறித்து அவதூறான தகவல்களை தெரிவித்துள்ளார். அவரது பெயருக்கு கலங்கம் ஏற்படுத்தும் வகையில் இதுபோன்று பேசி இருக்கிறார். மேலும் அந்த நபர் சமூக வலைதளங்களிலும் அவதூறான கருத்துக்களை பதிவிட்டு வருகிறார். இ்வ்வாறு தவறான தகவல்களை வெளியிடுவதால், மோதலை உருவாக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

எனவே, சம்பந்தப்பட்ட அந்த யூடியூப் சேனல் மற்றும் அவதூறான கருத்தை பேசியவர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் அவர்கள் கூறியுள்ளனர்.

மனுவை பெற்று கொண்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறினார்.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்