தமிழக செய்திகள்

பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பினர் ஆர்ப்பாட்டம்

நெல்லை மேலப்பாளையத்தில் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

தினத்தந்தி

நெல்லை:

பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பினர் நேற்று மேலப்பாளையம் சந்தை முக்கில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். மாவட்ட தலைவர் முகம்மது அலி தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் இம்ரான் அலி வரவேற்றார். நெல்லை மண்டல தலைவர் முகம்மது அமீன், எஸ்.டி.பி.ஐ. கட்சி புறநகர் மாவட்ட தலைவர் பீர் மஸ்தான் ஆகியோர் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து பேசினார்கள்.

பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பை பழிவாங்கும் நோக்கில் அதனுடன் தொடர்புடையவர்களின் வங்கி கணக்குகளை தற்காலிகமாக முடக்கிய அமலாக்கத்துறையை கண்டித்து இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் தமிழ்புலிகள் மாவட்ட செயலாளர் தமிழரசு, எஸ்.டி.பி.ஐ. மாநகர் மாவட்ட தலைவர் சாகுல் ஹமீது உஸ்மானி, துணை தலைவர் கனி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு