தமிழக செய்திகள்

மெட்ரோ ரெயில் நிர்வாக கட்டிடத்தில் பேரிடர் மீட்பு குழுவினர் விழிப்புணர்வு ஒத்திகை

கோயம்பேடு மெட்ரோ ரெயில் நிர்வாக அலுவலக கட்டிடத்தில் இயற்கை பேரிடர் காலத்தில் ஏற்படும் விபத்துகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

தினத்தந்தி

சென்னை கோயம்பேடு மெட்ரோ ரெயில் நிர்வாக அலுவலக கட்டிடத்தில் இயற்கை பேரிடர் காலத்தில் ஏற்படும் விபத்துகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பேரிடர் மீட்பு குழுவினர் சார்பில் ஒத்திகை பயிற்சி நடைபெற்றது. இதில் தேசிய பேரிடர் மீட்புக்குழு, தமிழக பேரிடர் மீட்புக் குழு மற்றும் தீயணைப்பு துறையினர் இணைந்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

ஒத்திகையில், இயற்கை பேரிடர் காலத்தில் எதிர்பாராத வகையில் ஏற்படும் நிலநடுக்கம், நிலசரிவு, தீ விபத்து, வெள்ளம், புயல் போன்றவற்றில் இருந்து பொதுமக்களை எவ்வாறு காப்பாற்றுவது என்பது குறித்து மீட்புகுழுவினர் செய்து காட்டினர்.

இந்த ஒத்திகை குறித்து மெட்ரோ ரெயில் நிர்வாக இயக்குனர் ராஜேஷ் சதுர்வேதி கூறுகையில்,

''பேரிடர் காலத்தில் தங்களது உயிரையும், உடமைகளையும் காத்து கொள்வது பற்றி தேசிய பேரிடர் மீட்புக்குழு, முதல்முறையாக இந்த ஒத்திகை பயிற்சியினை சென்னை மெட்ரோ ரெயில் நிர்வாக அலுவலகத்தில் நடத்தியுள்ளனர்'' என தெரிவித்தார்.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்