சென்னை,
தீபாவளி பண்டிகை வருகிற 24-ந் தேதி (திங்கட்கிழமை) கொண்டாடப்படுகிறது. அதற்கு அடுத்த நாள் செவ்வாய்க்கிழமை விடுமுறை விட அரசு பரிசீலனை செய்து வருவதாக கூறப்படுகிறது. தீபாவளிக்கு முன்பு சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை வார விடுமுறை நாட்கள் ஆகும். இதன் காரணமாக தீபாவளி பண்டிகையை கொண்டாட குடும்பத்துடன் சொந்த ஊர் செல்பவர்கள் வருகிற 21-ந் தேதி(வெள்ளிக்கிழமை) முதலே புறப்பட்டு செல்ல திட்டமிட்டுள்ளனர்.
இதையொட்டி சொந்த ஊருக்கு செல்லும் பயணிகள் வசதிக்காக அரசு விரைவு போக்குவரத்து கழகம் சார்பில் வருகிற 21-ந் தேதி முதல் 23-ந் தேதி வரை 3 நாட்களுக்கு தினசரி வழக்கமாக இயக்கப்படும் பஸ்களுடன் கூடுதலாக சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளது.
இந்த நிலையில் கடைசி நேர பயணம் மற்றும் குறித்த நேரத்தில் சொகுசு பயணம் மேற்கொள்ள விரும்பும் பயணிகள் ஆம்னி பஸ்சை தேர்ந்தெடுத்து செல்கிறார்கள். தீபாவளி பண்டிகைக்காக சென்னையில் இருந்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு 1000 ஆம்னி பஸ்கள் இயக்கப்பட உள்ளது.
இதற்கான முன்பதிவு தொடங்கி நடந்து வருகிறது. வருகிற 21-ந்தேதி பயணத்துக்கு ஆம்னி பஸ்களில் முழுவதும் முடிந்து விட்டன. சில பஸ்களில் மட்டும் ஒரு சில இருக்கை மட்டுமே காலியாக உள்ளன. ஆம்னி பஸ்களில் கட்டணம் பல மடங்கு அதிகரித்து உள்ளது. வருகிற 22, 23-ந்தேதிகளில் அனைத்து பஸ்களும் நிரம்பி விட்டன.
இந்த நிலையில், தீபாவளி பண்டிகை நெருங்கும் நிலையில் ஆம்னி பஸ்களில் கட்டம் பல மடங்கு உயர்துள்ளதாக பயணிகள் குற்றம் சாட்டியுள்ளனர். மேலும், சென்னையில் இருந்து சிருச்சி, மதுரை உள்ளிட்ட தென் மாவட்டங்களுக்கு செல்ல ரூ. 3 ஆயிரம் முதல் 3,500 வரை கட்டணம் வசூலிப்பதாகவும் தெரிவிக்கின்றனர்.