தமிழக செய்திகள்

3 சட்டமன்ற தொகுதிகளுக்கான வரைவு வாக்குச்சாவடி பட்டியல்

நாகை மாவட்டத்தில் 3 சட்டமன்ற தொகுதிகளுக்கான வரைவு வாக்குச்சாவடி பட்டியலை கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் வெளியிட்டார்.

தினத்தந்தி

நாகை மாவட்டத்தில் 3 சட்டமன்ற தொகுதிகளுக்கான வரைவு வாக்குச்சாவடி பட்டியலை கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் வெளியிட்டார்.

வரைவு வாக்குச்சாவடி பட்டியல்

நாகை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் சட்டமன்றத் தொகுதிகளுக்கு உட்பட்ட கிராமப்புற மற்றும் நகர்ப்புறங்களில் உள்ள வாக்குச்சாவடி நிலையங்களுக்கான வரைவு வாக்குச்சாவடி பட்டியல் வெளியிடும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சிக்கு கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் தலைமை தாங்கி, அங்கீகரிக்கப்பட்ட கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் பட்டியலை வெளியிட்டார். அப்போது அவர் கூறும் போது:-

651 வாக்குச்சாவடி நிலையங்கள்

நாகை மாவட்டத்தில் உள்ள நாகை, வேதாரண்யம், கீழ்வேளூர் ஆகிய 3 சட்டமன்றத்தொகுதிகளுக்கு உட்பட்ட கிராமப்புற மற்றும் நகர்ப்புறங்களில் 651 வாக்குச்சாவடி நிலையங்களுக்கான வரைவு வாக்குச்சாவடி பட்டியல் அங்கீகரிக்கப்பட்ட கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் வெளியிடப்பட்டது.

மேலும் 1500-க்கு மேல் வாக்காளர்கள் உள்ள வாக்குச்சாவடிகளை பிரித்தல், வாக்குச்சாவடிகளின் பெயர் மாற்றம் மற்றும் வாக்குச்சாவடிகள் இடம் மாற்றம் போன்ற மறுசீரமைப்பு தொடர்பாக கோரிக்கைகள், ஆட்சேபனைகள் அங்கீகரிக்கப்பட்ட கட்சி பிரமுகர்களிடம் பரிசீலனை செய்யப்பட்டுள்ளது என்றார்.

இந்நிகழ்ச்சியில் உதவி கலெக்டர் பானோத் ம்ருகேந்தர் லால், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொ) ராமன், தேர்தல் தாசில்தார் சாந்தி உள்பட பலர் உடனிருந்தனர்.

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு