தமிழக செய்திகள்

திரவுபதி அம்மன் கோவிலில் துரியோதனன் படுகளம் நிகழ்ச்சி

கொடைக்கல் கிராமத்தில் திரவுபதி அம்மன் கோவிலில் துரியோதனன் படுகளம் நிகழ்ச்சி நடந்தது.

சோளிங்கரை அடுத்த கொடைக்கல் மோட்டூர் கிராமத்தில் அமைந்துள்ள திரவுபதி அம்மன் கோவிலில் 10 நாட்கள் நடக்கும் தீமிதி திருவிழா கடந்த வாரம் கொடியேற்றத்துடன் தொடங்கியது. நிறைவு நாளில் சிறப்பு பூஜை, அபிஷேகம் செய்து அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை நடைபெற்றது. இதைத்தொடர்ந்து துரியோதனன் படுகளம் நிகழ்ச்சி நடந்தது. கட்டைக் கூத்து கலைஞர்கள் மகாபாரதத்தை நினைவு கூறும் வகையில் நடித்துக்காட்டினார்கள்.

இந்த நிகழ்ச்சியில் சோளிங்கர் சட்டமன்ற உறுப்பினர் ஏ.எம். முனிரத்தினம் கலந்து கொண்டு தரிசனம் செய்தார். 10-க்கும் மேற்பட்ட கிராம பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். 500-க்கும் மேற்பட்டோர் காப்பு கட்டி விரதமிருந்து தீமிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினார்கள்.

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை