தமிழக செய்திகள்

மின்சாரம் தாக்கி எலக்ட்ரீசியன் சாவு

சுரண்டையில் மின்சாரம் தாக்கி எலக்ட்ரீசியன் இறந்தார்.

தினத்தந்தி

சுரண்டை:

பாவூர்சத்திரம் அருகே முத்துமாலைபுரம் மெயின் ரோடு பகுதியை சேர்ந்தவர் முருகன் (வயது 53). எலக்ட்ரீசியன் வேலை பார்த்து வந்தார். நேற்று காலை சுரண்டை ஆலடிப்பட்டி பகுதியில் உள்ள தனியாருக்கு சொந்தமான கிணறு ஆழப்படுத்தும் பணி நடந்து வந்தது. கிணற்றுக்குள் இருந்த மோட்டாரை வெளியே எடுப்பதற்காக முருகன் லிப்ட் மூலம் இறங்கினார். பின்னர் அதில் ஏறி மோட்டாரை மேலே கொண்டு வரும்போது எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கி முருகன் பரிதாபமாக இறந்தார். தகவல் அறிந்ததும் சுரண்டை போலீசார் மற்றும் தீயணைப்பு படையினர் விரைந்து வந்தனர். முருகன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து சுரண்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு