தமிழக செய்திகள்

தக்கலை அருகே போதை பொருள் கிடைக்காததால் என்ஜினீயர் விஷம் குடித்து தற்கொலை

தக்கலை அருக போதை பொருள் கிடைக்காததால் என்ஜினீயர் விஷம் குடித்து தற்கொலை செய்து காண்டார்.

தினத்தந்தி

தக்கலை:

தக்கலை அருக போதை பொருள் கிடைக்காததால் என்ஜினீயர் விஷம் குடித்து தற்கொலை செய்து காண்டார்.

என்ஜினீயர்

தக்கலை அருகே உள்ள காட்டாத்துறை பருத்திக்கோட்ட விளையை சேர்ந்தவர் பீட்டர் தாமஸ். இவரது மகன் விஜின் பிரகாஷ் (வயது24). என்ஜினீயரிங் படித்த இவர் போதைக்கு அடிமையாகி வேலைக்கு செல்லாமல் நண்பர்களோடு ஊர் சுற்றி வந்தார். இதனால் பெற்றோர் இவரை அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்று போதை பழக்கத்தில் இருந்து விடுபடுவதற்கான சிகிச்சை அளித்தனர்.

தொடர்ந்து, பிரகாஷ் வீட்டில் இருந்த படியே பெற்றோரின் கண்காணிப்பில் மருந்து சாப்பிட்டு வந்தார். இதனால் வெளியே சென்று போதை பொருட்களை வாங்க முடியாமல் தவித்தார்.

இதில் விரக்தியடைந்த பிரகாஷ் சம்பவத்தன்று வீட்டில் இருந்த பூச்சி கொல்லி மருந்தை எடுத்து குடித்து மயங்கி விழுந்தார்.

பரிதாப சாவு

அவரை குடும்பத்தினர் மீட்டு தக்கலை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று அதிகாலையில் பிரகாஷ் பரிதாபமாக இறந்தார்

இதுகுறித்து தக்கலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். போதை பொருள் கிடைக்காததால் என்ஜினீயர் விஷம் குடித்து தற்கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு