தமிழக செய்திகள்

வீடு புகுந்து தி.மு.க. நிர்வாகியை தாக்கிய 8 பேர் மீது வழக்கு

தேனி அருகே வீடு புகுந்து தி.மு.க. நிர்வாகியை தாக்கிய 8 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்

தினத்தந்தி

தேனி அருகே உள்ள வீரபாண்டி மெயின் தெருவை சேர்ந்தவர் ரத்தின சபாபதி (வயது 62). தேனி தெற்கு ஒன்றிய திமுக பொறுப்பாளராக உள்ளார். நேற்று  இரவு இவரை, வீடு புகுந்து மர்ம கும்பல் உருட்டுக்கட்டை மற்றும் கற்களால் தாக்கியது. மேலும் வீட்டின் மீது கற்கள் வீசி தாக்குதல் நடத்தினர்.

இதில் காயம் அடைந்த ரத்தின சபாபதி தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து அவர் வீரபாண்டி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் நடந்து முடிந்த வீரபாண்டி பேரூராட்சி தி.மு.க. உட்கட்சி தேர்தல் முடிவு தொடர்பாக அதே பகுதியை சேர்ந்த சாந்தகுமார், அவரது தம்பி மகேந்திரன் ஆகியோருக்கும் ரத்தினசபாபதிக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்தது.

இதனால் அவர்கள் 2 பேரும், அதே பகுதியை சேர்ந்த ராஜேஷ், தாமரைக்கண்ணன், பிரபாகரன், வினோத், தீனா, மகேந்திரன் மனைவி கவிதா ஆகியோருடன் சேர்ந்து ரத்தின சபாபதியை தாக்கியது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவர்கள் 8 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து தேடி வருகின்றனர். 

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்