இதுகுறித்து அவர் கோவில்பட்டியில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-
சசிகலாவுக்கு நிர்ப்பந்தம்
அ.தி.மு.க.வில் இருந்து ஒதுங்கி இருப்பவர்களிடமே சசிகலா பேசி வருகிறார். விளாத்திளத்தில் சசிகலாவுக்கு ஆதரவாக நடத்தப்பட்ட கூட்டத்தில் அ.தி.மு.க. நிர்வாகிகள் யாரும் பங்கேற்கவில்லை. அ.தி.மு.க.வில் சசிகலாவை ஏற்க
மாட்டோம் என்று தீர்மானம் நிறைவேற்றிய பின்னரும் அவர் அ.தி.மு.க.வுக்கு வர முயற்சிப்பதற்கு என்ன நிர்ப்பந்தம் என்று தெரியவில்லை. சசிகலா ஒரு கட்சியை தொடங்கிய பின்னர் சுற்றுப்பயணம் செய்தால் அதை யாரும் தடுக்க
முடியாது. மாறாக அவர் அ.தி.மு.க. என்ற போர்வையில் தமிழகத்தில் சுற்றுப்பயணம் வரக்கூடாது என்பதுதான் எங்களது கருத்து. சசிகலா அ.ம.மு.க.விற்கு தலைமையேற்று வழி நடத்தலாம். அதில் எங்களுக்கு ஆட்சேபனை கிடையாது.
அ.தி.மு.க.வுக்கு பாதிப்பு இல்லை
அ.தி.மு.க.வில் யாரும் சேருவதற்கு ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் ஒப்புதல் வேண்டும். அ.தி.மு.க. பொதுச்செயலாளருக்கு இருந்த அதிகாரம் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளருக்கு வழங்கப்பட்டுள்ளது. என்னைக்கூட கட்சியில் இருந்து நீக்கம் செய்கின்ற அதிகாரம் அவர்களிடம் உள்ளது. தமிழகத்தில் சசிகலா சுற்றுப்பயணத்தின்போது அ.தி.மு.க.வினர் யாரும் செல்லப்போவதில்லை. ஆகையால் சசிகலா சுற்றுப்பயணத்தினால் அ.தி.மு.க.விற்கு எவ்வித பாதிப்பும் ஏற்படப்போவதில்லை. அ.தி.மு.க. கட்சி வீறுகொண்டு எழுந்து அடுத்து வரும் நாடாளுமன்ற, சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெறும்.
இவ்வாறு அவர் கூறினார்.