தமிழக செய்திகள்

“பண்டிகைக் காலம்: மக்கள் கவனமாக இருக்க வேண்டும்” - மக்கள் நல்வாழ்வுத்துறை செயலளர் ராதாகிருஷ்ணன்

பண்டிகை காலங்கள் வர இருப்பதால் மக்கள் கவனமாக நடந்து கொள்ள வேண்டும் என மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

தினத்தந்தி

விருதுநகர்,

விருதுநகர் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் 380 கோடி ருபாய் மதிப்பீட்டில் மருத்துவக் கல்லூரி கட்டப்பட்டு வருகிறது. இதனை இன்று மக்கள் நல்வாழ்வுத்துறை செயலளர் ராதாகிருஷ்ணன், விருதுநகர் மாவட்ட கலெக்டர் மேகநாத ரெட்டி உள்ளிட்டோர் நேரில் பார்வையிட்டனர்.

இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ராதாகிருஷ்ணன், தினமும் அரசு நடத்தும் முகாம்களில் கலந்து கொண்டு அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தினார். அதே நேரம் வரக்கூடிய பண்டிகைக் காலங்களில் போக்குவரத்திலும், குழுவாக செயல்படும் இடங்களிலும் மக்கள் கவனமாக நடந்து கொள்ள வேண்டும் என்று தெரிவித்த அவர், தமிழகத்தில் கொரோனா கட்டுப்பாடு தளர்த்தப்பட்டாலும் கண்காணிப்பு தொடரும் என்று கூறினார்.

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு