தமிழக செய்திகள்

ரூ.20 ஆயிரம் மதிப்பிலான வைக்கோல் எரிந்து நாசம்

திருப்பனந்தாளில் ஏற்பட்ட தீ விபத்தில் ரூ.20 ஆயிரம் மதிப்பிலான வைக்கோல் எரிந்து நாசமடைந்தது.

தினத்தந்தி

திருப்பனந்தாள், ஆக.6-

திருப்பனந்தாளில் ஏற்பட்ட தீ விபத்தில் ரூ.20 ஆயிரம் மதிப்பிலான வைக்கோல் எரிந்து நாசமடைந்தது.

தீ விபத்து

தஞ்சை மாவட்டம் திருப்பனந்தாளை அடுத்த அணைக்கரை மதுசாலையில் வசிப்பவர் பாஸ்கர்(வயது40) விவசாயி. இவர் தனது வீட்டில் வளர்க்கும் மாடுகள், கன்றுகளுக்காக வயலில் அறுவடை செய்த வைக்கோலை சுமார் 100 கட்டுக்கும் மேலாக கட்டி அடுக்கி வைத்திருந்தார்.இந்தநிலையில் திடீரென வைக்கோல் போர் தீப்பற்றி எரிந்தது. இது குறித்து தகவல் அறிந்த திருவிடைமருதூர் தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று 2 மணி நேரத்துக்கு மேல் போராடி தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர்.

ரூ.20 ஆயிரம்

வைக்கோல்கட்டுகள் அருகே யாரோ சிலர் குப்பைகளை தீ வைத்து எரித்த போது காற்றில் தீ வைக்கோல் கட்டுகளுக்கு பரவி இருக்கலாம் என கூறப்படுகிறது. தீயில் எரிந்து நாசமடைந்த வக்கோல் கட்டுகளின் மதிப்பு ரூ.20 ஆயிரம் என கூறப்படுகிறது. இது குறித்து பந்தநல்லூர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்