தமிழக செய்திகள்

பணிஓய்வு பெறும் தலைமைச்செயலாளர் இறையன்பு, டிஜிபி சைலேந்திரபாபுவுக்கு முதல் அமைச்சர் வாழ்த்து

இருவரையும் நேரில் அழைத்த முதல் அமைச்சர், அவர்களுக்கு சால்வை அணிவித்து வாழ்த்துக்களை தெரிவித்தார்.

தினத்தந்தி

சென்னை,

தமிழக அரசு தலைமை செயலாளராக செயல்பட்டுவந்த இறையன்பு இன்றுடன் பணி ஓய்வு பெறுகிறார். அதேபோல, தமிழக டிஜிபியாக கடந்த இரண்டு ஆண்டுகளாக பணியாற்றிவந்த சைலேந்திரபாபுவும் இன்றுடன் பணி ஓய்வு பெறுகிறார்.

பணிஓய்வு பெறும் இருவருக்கும் பல்வேறு தரப்பில் இருந்து வாழ்த்துக்கள் குவிந்துவருகிறது. இந்த நிலையில், இன்றுடன் பணிஓய்வு பெறும் தலைமை செயலாளர் இறையன்பு மற்றும் டிஜிபி சைலேந்திரபாபுவுக்கு முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதற்காக இருவரையும் நேரில் அழைத்த முதல் அமைச்சர், அவர்களுக்கு சால்வை அணிவித்து வாழ்த்துக்களை தெரிவித்தார்.

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்