தமிழக செய்திகள்

சூறைக்காற்றில் மீன் விற்பனைக்கூடம் சேதம்

கூட்டப்பனை கிராமத்தில் வீசிய சூறைக்காற்றில் மீன் விற்பனைக்கூடம் சேதம் அடைந்தது.

திசையன்விளை:

நெல்லை மாவட்ட கடற்கரை பகுதியில் பலத்த சூறைக்காற்று வீசக்கூடும் என எச்சரிக்கை விடப்பட்டதை தொடர்ந்து கடந்த ஒரு வார காலமாக மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. நேற்று முன்தினம் கூட்டப்பனை மீனவர் கிராமத்தில் பலத்த காற்றுடன் கடல் சீற்றமாக காணப்பட்டது. வழக்கத்தைவிட கடல் அலை அதிகமாக இருந்தது. இதனால் கடல்நீர் சுமார் 150 அடிக்கு மேல் வெளி வாங்கியது. கடற்கரையில் அரசால் கட்டி கொடுக்கப்பட்டு இருந்த மீன் ஏலக்கூடம் கடல் அரிப்பில் சரிந்து சேதம் அடைந்தது. எனவே போர்க்கால அடிப்படையில் தூண்டில் வளைவு அமைக்க வேண்டும் என அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்