தமிழக செய்திகள்

கொசஸ்தலை ஆற்றில் வெள்ளப்பெருக்கு - தரைப்பாலத்தில் போக்குவரத்துக்கு தடை

ஆவடியில் உள்ள கொசஸ்தலை ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் 20 கிராம மக்கள் செல்லும் தரைப்பாலத்தில் போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

சென்னை,

சென்னை ஆவடியை அடுத்த கொசவம்பாளையம்த்தில் உள்ள கொசஸ்தலை ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் மதகுகளில் இருந்து தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொண்டு வெளியேறியது. இந்த வெள்ள நீர் கூவம் ஆறு வழியாக சென்று கடலில் கலப்பதால் அருகே இருக்கும் தரைப்பாலத்தை பொதுமக்கள் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதனால் திருநின்றவூரைச் சுற்றியிருக்கும் 20-க்கும் மேற்பட்ட கிராம மக்களுக்கு போக்குவரத்து தடைப்பட்டுள்ளது. தினசரி வேலைக்குச் செல்வோர் 20 கி.மீ. சுற்றி பூந்தமல்லி, திருவள்ளூர், திருமழிசை வழியாக செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. எப்பொழுதும் வாகன நெரிசலுடன் காணப்படும் திருநின்றவூர் தரைப்பாலம், போக்குவரத்து தடையால் ஆள் நடமாற்றமின்றி வெறிச்சோடி காணப்பட்டது.

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை