தமிழக செய்திகள்

தீபாவளி பண்டிகைக்கான ரெயில் டிக்கெட் முன்பதிவு நாளை தொடங்குகிறது

சென்னையில் வேலை, தொழில், வியாபாரம், படிப்பு போன்ற காரணங்களால் வெளியூர் மற்றும் வெளிமாநிலங்களை சேர்ந்த பலர் வசித்து வருகிறார்கள்.

தினத்தந்தி

சென்னை,

இவர்களில் பெரும்பாலானோர் திருவிழா மற்றும் பண்டிகை காலங்களில் சொந்த ஊர்களுக்கு செல்வதை வழக்கமாக கொண்டுள்ளனர்.

இதன் காரணமாக தீபாவளி, பொங்கல், புத்தாண்டு போன்ற பண்டிகை காலங்களில் ரெயில் மற்றும் பஸ்களில் கூட்டம் அலைமோதும். இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை அக்டோபர் 27-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) வருகிறது. தீபாவளி பண்டிகைக்கு 2 நாட்களுக்கு முன்பு, அதாவது அக்டோபர் 25-ந் தேதி (வெள்ளிக்கிழமை) ரெயிலில் பயணம் செய்வதற்கான டிக்கெட் முன்பதிவு நாளை (ஞாயிற்றுக்கிழமை) தொடங்குகிறது. ரெயில்வேயில் 120 நாட்களுக்கு முன்னரே டிக்கெட் முன்பதிவு செய்து கொள்ளும் வசதி இருக்கிறது.

தீபாவளி பண்டிகைக்கு முந்தைய தினத்துக்கு (சனிக்கிழமை) டிக்கெட் முன்பதிவு நாளை மறுதினம் தொடங்குகிறது.

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு