தமிழக செய்திகள்

ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் பலி

ஒட்டன்சத்திரம் அருகே தடுப்புச்சுவரில் மோட்டார் சைக்கிள் மோதி ஊராட்சி மன்ற தலைவர் பரிதாபமாக இறந்தார்.

ஒட்டன்சத்திரம் அருகே கம்பளிநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் பாரவேல் (வயது 55.) விவசாயி. இவர், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவராக இருந்தார். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு மோட்டார் சைக்கிளில் பாரவேல் ஒட்டன்சத்திரம் நோக்கி வந்து கொண்டிருந்தார். அப்போது ஒட்டன்சத்திரம்-பழனி ரோட்டில் அரசப்பிள்ளைபட்டி ரயில்வே கேட் அருகே வந்தபோது, சாலையின் நடுவில் இருந்த தடுப்புச்சுவர் மீது மோட்டார் சைக்கிள் எதிர்பாராதவிதமாக மோதியது. இதில் படுகாயம் அடைந்த பாரவேலை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக கோவையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று பாரவேல் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து ஒட்டன்சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி