திருவாரூர்,
வங்கக்கடலில் உருவான கஜா புயல் தமிழகத்தின் தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, ராமநாதபுரம், திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் கடந்த 15-ந்தேதி நள்ளிரவு கோரத்தாண்டவம் ஆடியது. மணிக்கு 110 கி.மீ. வேகத்தில் அடித்த காற்றில் ஆயிரக்கணக்கான குடிசை மற்றும் ஓட்டு வீடுகள் இடிந்தன.